சுற்றுலாப்பயணிகளுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று செய்த செயல் : கவலை வெளியிட்டுள்ள சுற்றுலாப்பயணி

இலங்கையில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி குழுவொன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மாத்தறையில் பகுதியில் வைத்து தான் செயலி ஒன்றின் மூலம் டாக்சி சேவையில் பயணிக்க முயன்றதற்காக அப்பிரதேச உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னையும் நண்பர்கள் குழுவையும் துன்புறுத்தியதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேர்மன் சுற்றுலாப் பயணியான குறித்த பெண் பெப்ரவரி 18 ஆம் திகதி பேருந்து மூலம் மாத்தறைக்கு வந்ததாகவும், மிரிஸ்ஸ கடற்கரைக்குச் செல்வதற்காக கைபேசி செயல மூலம் டாக்ஸி சேவையின் மூலம் ஒரு காரை முன்பதிவு செய்ததாகவும்  தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர்கள் வாகனத்தில் ஏற முற்பட்ட போது, உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் குழுவொன்று, டாக்சி சேவையைப் பயன்படுத்த விடாமல் தடுத்ததாக அவர் கூறினார்.

டாக்ஸி ஓட்டுநரை சந்திப்பதற்காக தானும் தனது நண்பர்களும் வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், ஆனால் உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகளால் மீண்டும் ஒருமுறை சுற்றி வளைக்கப்பட்டதாகவும் சுற்றுலாப் பயணி தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி சாரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொமிஷன் செலுத்தியதன் பின்னர், செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவையில் இருந்து வந்த காரில் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவி;தார்.

இது ஒரு சோகமான நிலை எனத் தெரிவித்த ஜேர்மன் சுற்றுலாப் பயணி, சுற்றுலாப் பயணி என்ற வகையில் இலங்கையில் இது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக இருந்தது என்றும் தெரிவி;துள்ளார்.