மேலும் இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பதவியேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
அதன்படி,
பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமான் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
- Advertisement -