இஸ்ரேலில் 2000 இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்த வருடம் இஸ்ரேலில் 2000 இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக நாட்டிற்கு வந்துள்ள இலங்கை விசேட பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மேலும், இஸ்ரேலில் தாதியர் வேலை வழங்குவதற்காக இடைத்தரகர் ஒருவர் பணம் பெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தங்களுக்கு வழங்குமாறு அந்நாட்டு மக்கள் மற்றும் குடியேற்ற முகவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.