ஜனவரியில் சேவை நடவடிக்கைகளில் சிறிதளவு வளர்ச்சி
ஜனவரி மாதத்தில் நாட்டில் சேவை நடவடிக்கைகளில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்ட போதும், உற்பத்தி நடவடிக்கைகளில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை கொள்வனவு முகாமையாளர்கள் சுட்டெண் அடிப்படையில், உற்பத்தித் துறையின் சுட்டெண் மதிப்பு 40.8 ஆக பதிவாகியுள்ளது. இது டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 04 சுட்டெண் இலக்கங்கள் குறைந்துள்ளது.
புதிய கொள்வனவுகள், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் ஆகியவை குறைந்துள்ளன.
இருப்பினும், புதிய தொழில்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் அதிகரிப்புடன் சேவைத் துறையில் ஓரளவு வளர்ச்சி காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.