
சிறுவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி
-கிளிநொச்சி நிருபர்-
சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி, வடமராட்சி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால் பேரணியாக சென்றது.
இதில் சிறுவர்களால் மரங்களை வெட்டி வளங்களை அழிக்காதே, மது போதையை கட்டுப்படுத்து, சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுத்து நிறுத்துங்கள் உட்பட பல்வேறு பதாதைகள் ஏந்தியவாறு சென்றனர்.
இதில் மணல்காடு கிராமத்திற்க்குட்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.