பாரம்பரிய உடையில் பெண்களின் கால்பந்து

நமது பாரம்பரிய உடையான சேலையானது விளையாட்டு, வாகனம் ஓட்டுதல் போன்ற வேலைகளின் போது சௌகரியத்தை தராது என்பதுதான் பரவலான கண்ணோட்டம் ஆகும். ஆனால், இதையெல்லாம் பொய்யாக்குகின்ற வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்தியா – மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் மகளிருக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது. அதுவும் பெண்கள் சேலை அணிந்து கொண்டு பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 மற்றும் மார்ச் 26 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் தங்கள் அணியின் சீருடைக்கு ஏற்பட்ட ஒரேஞ், பச்சை நிற சேலைகளை அணிந்து கொண்டு மகளிர் களத்தில் இறங்கினர். இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்து கொள்ள, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த கால்பந்து போட்டியில் இல்லத்தரசிகள்இ ஆசிரியர்கள் உள்பட பல்துறைகளைச் சேர்ந்த 96 பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். சேலை அணிவோம்இ கட்டுகோப்பாக காட்சியளிப்போம் என்ற சிந்தனையின் அடிப்படையில் நிகழ்ச்சியாளர்கள் இந்த கால்பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தியிருக்கின்றனர்.