வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமம் பற்றிய அறிவிப்பு
இன்றைய நாட்களில் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நாட்டின் பொருளாதார நிலமையும் காரணமாக உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் போது, குறித்த முகவர் நிலையங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 3 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 750,000 ரூபாவிலிருந்து 3 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாவது வருடத்தில் இருந்து 5 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
;