இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

இலங்கையில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அதன் பின்னராக காலப்பகுதியில் வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவணி இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சென்றடையவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்