TMVP கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

 

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின், சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில், இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான பிரம்மாண்ட மகளிர் பேரணியது, மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தை அடைந்தது.

கட்சியின் மகளிர் செயலாளர் சுசிகலா அருள்தாஸின் தலைமையில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரதான பங்குபற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் நந்தகோபன், முன்னாள் மகளிர் அணி செயலாளர் செல்வி மனோகர் அகியோரின் திருவுருவ சிலைக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டவர்களினால், மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டத்து

கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதை அடுத்து, மகளிர் அணி கொள்கை பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன், மகளிர் தின உரைகளும் நடைபெற்றது.