நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை  பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.