
ஆயிரக்கணக்கானவர்கள் பலி : 8 அதிகாரிகள் கைது
லிபியாவில் புயல் காரணமாக இரண்டு அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த விடயம் தொடர்பில் 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அதிகாரிகளின் தவறான மேலாண்மை, அலட்சியம் ஆகியவையே இந்த அனர்த்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான 08 அதிகாரிகளிடமும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்கு, 62 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லிபியாவில் புயல் காரணமாக இரண்டு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
