
37 ரயில் சேவைகள் இடம்பெறும்
ரயில் சாரதிகள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று புதன்கிழமை பிற்பகல் அலுவலக மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 37 ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் 18 சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 12 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளம் ரயில் மார்க்கத்தில் 4 சேவைகளையும், களனிவெளி மார்க்கத்தில் 3 சேவைகளையும் முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
