திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் உலக சுற்றாடல் வாரத்தினை ஒட்டியதாக மரம் நடுகை

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் உலக சுற்றாடல் வாரத்தினை ஒட்டியதாக தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு திடல் பாடசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை ஆகிய வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்று இருந்தது.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச திட்டமிடல் பிரிவின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பிரிவின் உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் இன்று காலை தம்பிலுவில் எதிர்ரொலி விளையாட்டுத் திடலில் இடம் பெற்று இருந்தது.

இதன்போது தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு மைதானம் ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் மணற்காடு அருணோதயா வித்தியாலயம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து உலக சுற்றாடல் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்ததோடு நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.பி.சீலன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர் மத்திய சுற்றாடல் அதிகார சபை  உத்தியோகத்தர் எஸ்.ராஜன் பாடசாலை அதிபர் ஆயூர்வேத வைத்தியர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்