
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : நிர்வாணமாக வீதியில் இழுத்து சென்ற மக்கள்
இந்தியாவில் 17 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் – மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் நீட்பயிற்சி மையம் ஒன்று உள்ளது.
இந்த மையத்தில் விவேக் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்கு படித்து வரும் 17 வயது மாணவியை படிப்புக்கு உதவுகிறேன் என தெரிவித்து அவரை விருந்தகம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
இதை நம்பி அந்த மாணவியும் அவருடன் சென்றுள்ளார்.
அப்போது விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.
விவேக்குடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினார்.
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் விவேக்கை பிடித்து அவர் அணிந்து இருந்த ஆடையை களைந்தனர்.
பின்னர் அவரை நிர்வாணமாக நடுவீதியில் ஊர்வலமாக அழைத்து சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
