
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று முதல்
அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளன.
எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
அதேநேரம், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் மே மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
