இலங்கையில் எலுமிச்சையின் விலை 1600 ரூபா

நாடளாவிய ரீதியில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தற்போது நாட்டில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 1,400 ரூபாய் தொடக்கம் 1,600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில்  விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

அதோடு , இவ்வாறான விலைக்கு விற்கப்படும் எலுமிச்சை மிகவும் சிறியது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்ந்லையில் சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.