விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கால்வாயில் வீசிய பொலிஸார் (வீடியோ இணைப்பு)

 

விபத்தில் பலியான ஒருவரின் உடலை பொலிஸார் கால்வாயில் வீசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவம் பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள ஃபகுலி பகுதியில் உள்ள தோதி கால்வாய் பாலம் அருகே இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவில்  மூன்று பொலிஸார் இணைந்து ஒருவரது சடலத்தை இழுத்துச் செல்வதை காணலாம். உயிரிழந்த ஒருவரின் இரத்தம் தோய்ந்த உடலை இரண்டு பொலிஸார் இழுத்துச் செல்கின்றனர்.

பின்னர்,  மூன்றாவது பொலிஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்ய  மூன்று பொலிஸாரும் அந்த சடலத்தை கால்வாயில் வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ  இறந்த ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்  குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.