விபத்திற்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருந்த வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய குருந்துவத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்