மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் குழப்பம் விழைவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
செம்மணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது. இதனை குழப்பும் வகையில் செம்மணி பகுதியில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் அழைக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விஷமிகளாலேயே அங்கு பெரும் பதற்ற நிலையும் அச்ச நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மிக விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படம்.
கிளிநொச்சியில் கள்ளகாணி பிடிப்பவரும் பார்போமிட் பெறுவதற்கு விண்ணப்பித்து விட்டு இருப்பவரும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுமே அங்கு பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளார்கள். இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும், என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.