புத்தகப்பையில் கசிப்பினை எடுத்து வந்த நபர் கைது

-யாழ் நிருபர்-

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு பகுதியில் இருந்து தனியார் பேருந்தில் குறித்து நபர் கசிப்பினை பைகளில் கட்டி எடுத்து வந்த போது யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இவரை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்