
மண்மேடு சரிந்து வீழ்ந்து போக்குவரத்து முற்றாக தடை
-பதுளை நிருபர்-
கொஸ்லந்த வெல்லவாய வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சஞ்சீவ சமரகோன் கூறுகையில்,
குறித்த வீதியில் விகாரகல சிறுவர் இல்லத்திற்கு அருகில் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் அதனை அகற்றி வீதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

