
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நிரந்தர தடை விதித்தது நீதிமன்று
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று புதன் கிழமை குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நீதி மன்றம் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினது ஏகமனதான தீர்மானத்துக்கமைய, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
