வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய பேருந்து
களுத்துறை யட்டபொத பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெலவத்தை – நெலுவ வீதியின் யட்டபொத பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பெரிய மரத்துடன் மோதியயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் காரணமாக பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்