தடம் புரண்டது பேருந்து

-மூதூர் நிருபர்-

மூதூர் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கங்குவேலி – புளியடிச்சோலை பாலத்திற்கு அருகிலேயே குறித்த பேருந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்தில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெய்வாதீனமாக சாரதி உயிர் சக்தி உள்ளதாகும் தெரியவருகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்