பற்றி எரிந்த பொடிமனிக்கே புகையிரதத்தின் பின் இயந்திரம்

-பதுளை நிருபர்-

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே புகையிரதத்தின் பின் இயந்திரம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை திடீரென தீ பிடித்து எரிந்ததாக ஹப்புத்தளை புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்

இன்று காலை 10.50 மணியளவில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் ஹப்புத்தளை புகையிரத நிலைய ஊழியர்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலைய ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சம்பவத்தை தொடர்ந்து பயணிகள் விஷேட புகையிரதத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இருப்பினும் தீ பிடித்த புகையிரதப் இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணம் அல்லது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்