கோவில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு உண்டியலை உடைத்து திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருடுவதற்கு முற்பட்ட போதே குறித்த சந்தேக நபர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் மேலும் சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்