Tag: JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

  • மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

    மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

    எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ​எஹலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

    சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ​வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி

    பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி

    பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி.

    சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்,  சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் அஜித் ரோஹன ஆகியோருக்கிடையில் பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்காக இந்த மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    தற்போதைய பொலிஸ்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தனது சேவையிலிருந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதால் அப்பதவி வெற்றிடத்திற்கு மேற்படி சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர்கள் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தனித்தனியான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பல சிரேஷ்ட அமைச்சர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • சாராயம் மற்றும் பியர் போத்தல்களுடன் ஒருவர் கைது

    சாராயம் மற்றும் பியர் போத்தல்களுடன் ஒருவர் கைது

     

    யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை 3ஆம் வட்டார பகுதியில், மதுபானத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஊர்காவற்துறை பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால், குறித்த சந்தேகநபர் 24 கால் போத்தல்கள் சாராயம் மற்றும் 06 பியர் போத்தல்கள் ஆகியவற்றை, புதருக்குள் வைத்து விற்பனை செய்தவேளை அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    விசாரணைகளின் பின்னர் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.

     

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • எனது சம்மதம் இன்றி யாரும் பணம் வழங்க வேண்டாம்

    எனது சம்மதம் இன்றி யாரும் பணம் வழங்க வேண்டாம்

    -யாழ் நிருபர்-

    எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்

    எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்கு தெரிவிக்காது எனது சம்மதத்தையும் பெறாது வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

    நானோ எனது கட்சியோ, எமது கட்சி உறுப்பினர்களோ இது பற்றி எந்த வித நிதி சேகரிப்பிலும் இறங்கும் படி எவரையும் கோரவில்லை. எனது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இத்தால் இதனைத் தெரியப்படுத்தி இவ்வாறாகப் பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    இந் நிதி சேகரிப்பானது இலங்கையிலிருக்கும் சிலரின் ஆதரவுடன் தமது சொந்த நலன்களுக்காகக் கூட இடம்பெறக்கூடும். அப்படி யாராவது எமது கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் செயற்பட்டுவரின் அவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    அரசியல் கட்சிகளின் நிதி அறிக்கைகள் வருடா வருடம் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தவறாது அனுப்பப்பட வேண்டும்.

    சென்ற ஆண்டுக்கான அறிக்கையை அனுப்புமாறு ஆணைக்குழு இப்பொழுது கோரியிருக்கின்றது. அவ் அறிக்கைளை இப்பொழுது நாம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படி இருக்கையில் இக் கணக்கு அறிக்கைகளில் காட்டப்படாது நிதி சேகரிக்கப்பட்டு செலவழிக்கப்படாது.

    இருப்பதையோ அல்லது அந் நிதி எமது கட்சி சார்பில் செலவு செய்தமைக்கு அத்தாட்சியையோ பெற்று அது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவது மட்டுமன்றி பொய்யான கணக்கறிக்கைகளை தயாரித்து அனுப்பியமைக்காக கட்சியின் பதிவைக்கூட இரத்துச் செய்வதற்கு இடமிருக்கின்றது.

    எனவே தயவு கூர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் எமக்கு தெரியாமல் ஈடுபட வேண்டாமென வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இருக்கும் அன்பான ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் தயவுடன் வேண்டி நிற்கின்றேன்.

    நாங்கள் ஏற்கனவே வங்கி கணக்கு விபரங்களுடன் எம் மக்களிடம் இருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளோம். அதன் படி நன்கொடைகள் குறித்த வங்கிக்கணக்கிற்குப் போடப்பட்டால் உரிய ரசீதுகள் அனுப்பப்படுவன.

    எமது சார்பில் என்று கருதி தனிப்பட்டவர்களுக்குக் கூட பணத்தைக் கொடுப்பதை என் தமிழ் உறவுகள் தவிர்க்க வேண்டும்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • விபத்தில் இளைஞன் உயிரிழப்பு :  தப்பி சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

    விபத்தில் இளைஞன் உயிரிழப்பு : தப்பி சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

    -யாழ் நிருபர்-

    காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இவ்வாறு உயிரிழந்தவர் நீர்வேலி தெற்கு, நீர்வேலியைச் சேர்ந்த இரத்தினேஸ்வரன் பாவிதான் (வயது 23) என்பவராவார்.

    கடந்த 23 ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார்.

    மயக்கமடைந்தவர் மீட்கப்பட்டு கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம்குமார் நேற்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டார்.

    இவ் விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

     

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

    சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

    -திருகோணமலை நிருபர்-

    இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

    நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட சந்திப்பிலே, அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

    அமைச்சின் கேட்போர் கடந்த செவ்வாய்க்கிழமை கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

    அமைச்சரின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, UNDP, INCU, UN Environment Programme, UNIDO, GGGI, Food and Agriculture Organization, EU and ICRA  கலந்து கொண்டனர்.

    இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

    சுற்றாடல் திட்டங்களுக்கான நிதியைப் பெறும் இலக்குகள் நோக்கி இலங்கை நகர வேண்டியுள்ளது.இது குறித்து அதிக கவனம் செலுத்துவதுடன், பயிற்சியிலும் ஈடுபடுவது அவசியம்.

    இதனால் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள சுற்றாடல் திட்டங்களுக்கு பலம் சேர்க்கும். சுற்றாடலை அபிவிருத்தி செய்வதற்கான உண்மையான இலக்குகளை கண்டறிவதுதான் இச்செயற்றிட்டத்தின் பிரதானம்.

    இதனால்,  இதற்குத் தேவையான நிதிகள்,  இச்செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பாதிப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற சுற்றாடலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பங்காளர்கள் தங்களது அனுபவங்கள், இத்திட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

    இதைக் கவனத்தில் கொண்ட அமைச்சர், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்படும் கூட்டங்களில் அவசியம் கலந்து கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.

    மேலும், இவ்வாறான திட்டங்களுக்கு உதவியளித்த முகவர் நிறுவனங்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.’

     

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

    11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

    -யாழ் நிருபர்-

     

    அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று பண்ணை மீன்சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன்சந்தை, சின்னக்கடை மீன்சந்தை ஆகிய இடங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அவ்வேளையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அத்துடன், இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை நிறுக்கும்  அல்லது அளக்கும் உபகரணங்களை  வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வர்த்தகர்கள் நுகர்வோருக்கு நம்பகரமான சேவையை வழங்க முன்வர வேண்டும் என அறிவித்துள்ளனர்.

     

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

  • வாள்வெட்டு சம்பவம் : சந்தேக நபர் கைது

    வாள்வெட்டு சம்பவம் : சந்தேக நபர் கைது

    -யாழ் நிருபர்-

    கடந்த சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று புதன்கிழமை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.

    குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

     

     

     

  • இன்றைய ராசிபலன்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்:
    குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது இலாபகரமாக அமையும். வியாபாரத்தில் இலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.

    ரிஷபம்:
    குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

    மிதுனம்:
    ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். பண விஷயத்தில் கண்டிப்பாக இருங்கள். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

    கடகம்:
    கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

    சிம்மம்:
    எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்‌.

    கன்னி:
    சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

    துலாம்:
    கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைதிருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

    விருச்சிகம்:
    சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலானஇ சவாலான காரியத்தை கையில் எடு்க்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். முக்கியகோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

    தனுசு:
    பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்‌. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தைரியமாக முடிவுகள் எடுப்பார்கள். நன்மை நடக்கும் நாள்.

    மகரம்:
    சமயோசிதமாக சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். அதிகாரப் பதவிபொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கும். அமோகமான நாள்.

    கும்பம்:
    குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.‌ கனவு நனவாகும் நாள்.

    மீனம்:
    திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும் நாள்.

     

     

     

     

  • வீடொன்றின் முன்னால் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்

    வீடொன்றின் முன்னால் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்

    -யாழ் நிருபர்-

    யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சாளி மோட்டார் சைக்கிள் ஒன்று அதன் பாகங்கள் கழற்றி எடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    குறித்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தவேளை மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

    இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

     

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்