
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த போட்டி சென்னையில் நேற்றிரவு 7.30க்கு ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து, 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ், 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதன்படி, 2024 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
