சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரேரணை பிரதி கையளிப்பு

நிலவும் சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளுடன் கூடிய எட்டு பிரேரணையின் பிரதியொன்று அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில், உதவி செயலாளர் பிரபாத், வைத்தியர் வசந்த உள்ளிட்ட வைத்தியர்களால் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரிடம் அவர்களிடம்  இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.