
தரம் 1-5 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக கட்டுப்படுத்த தீர்மானம்
பாடசாலைகளுக்கு இந்த ஆண்டு முதல் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 40 ஆகவும், 6 முதல் 11 ஆம் வகுப்புக்கு 45 மாணவர்களாகவும் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அரசாங்கப் பாடசாலைகளில் தற்போதைய சுற்றறிக்கை விதிகளை மேலும் நெறிப்படுத்துவதன் மூலம் 2023ஆம் ஆண்டு முதல் புதிய சேர்க்கை முறை அறிமுகப்படுத்தப்படும் என்று இன்றைய வாராந்திர அமைச்சரவை செய்தி மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கல்வி அமைச்சு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று வகுப்புகளில் மாணவர்களின் அதிக நெரிசல். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது, இது மாணவர்களின் கல்வி மற்றும் செயல்திறனை நேரடியாக பாதிக்கிறது.
ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு கட்டுப்படுத்துவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிம்மதியாக இருக்கும்” என்று அமைச்சர் குணவர்தன இதன் போது வலியுறுத்தினார்.