நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு

திருகோணமலையில் நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இணைந்து திருகோணமலை நகரில் கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக திருகோணமலை நகரில் இந்த செயற்பாடு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடைசுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ.இராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்