திருமலைக்கு பெருமை சேர்த்த தன்வந்திற்கு தபால்தலை வெளியீடு

-மூதூர் நிருபர்-

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்து திருகோணமலை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள ஹரிகரன் தன்வந்திற்கு தபால்தலை வெளியிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எதிர்வரும் 31.05.2024 அன்று மாலை 5 மணிக்கு திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை இந்துக்கல்லூரியின் மாணவனும் திரு.திருமதி.ஹரிகரன் – தயாளினி தம்பதியினரின் புதல்வனுமான ஹரிகரன் தன்வந்த (வயது -13) 01.03.2024 அன்று தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை 9மணித்தியாலம் 37நிமிடம் 54 செக்கனில் நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார். குறித்த மாணவனை பல்வேறுபட்ட தரப்பினரும் பல்வேறு விதமாக கௌரவப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்க இருக்கின்ற தன்வந்திற்கான தபால்தலை வெளியிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்