முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜே சிறி ரங்கா இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் தெரிவிற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது 27 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
இதேவேளை, இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜகத் ரோஹனவுக்கு 24 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இதேவேளை, கடந்த வாரம் ஜே சிறி ரங்கா எமது செய்தி பிரிவின் “மின்னல் தேடல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலங்கையின் கால்பந்து விளையாட்டின் நிலை தொடர்பில் பல விடயங்களை கலந்துரையாடியிருந்தார்.
மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் அரசியல்வாதியுமான உதயகுமார் மற்றும் பல அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறி ரங்கா கலந்து கொண்ட “மின்னல் தேடல்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி