ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலை

ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்த சனத்தொகையில் 10 முதல் 15 சதவீதமானவர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களின் பெருமளவில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்