
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் ஈரானின் ஆரம்பப் பாடசாலை சிறுமிகளின் நினைவாக விசேட அஞ்சலி
தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் அமெரிக்க – இஸ்ரேலியப் படைகள் நடத்திய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆரம்பப் பாடசாலை சிறுமிகளின் நினைவாக, கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் விசேட அஞ்சலி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
தாக்குதலில் பலியான சிறுமிகளின் புகைப்படங்களை அவர்களது பெயர்களுடன் தூதரக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் இந்த முயற்சி, போரினால் பாதிக்கப்படும் அப்பாவி உயிர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் அமைந்துள்ளது.
