Last updated on April 28th, 2023 at 03:24 pm

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற மாணவன்

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற மாணவன்

சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் 15 வயதின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட கிளிநொச்சியை சேர்ந்த எழில்ப்பிரயன்,  50.76 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 51ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று புதன்கிழமை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்லட்ஸ் நிறுவனத்தின் அனுசாணையுடன் நடைபெறுகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் இரண்டு புதிய போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன.