செல்போனால் சகோதரி 3 மாதக் கர்ப்பம் : தம்பி பொலிசாரால் கைது

இந்தியா மும்பையில் செல்போனில் ஆபாசப் படத்தை பார்த்த 15 வயது சகோதரி கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பாக 13 வயது தம்பியை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

மும்பையின் பன்வேலி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 3 மாதம் கர்ப்பமாகி இருப்பதாகவும், அதை கலைக்க வேண்டும் என்று கூறி, அவர்களது பெற்றோர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த சிறுமி 15 வயது என்பதால் மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியிடம் பொலிசார் நடத்திய விசாரணையின்போது தான், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் செல்போனில் அக்காவும், தம்பியும் சேர்ந்து ஆபாசப் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இவ்வாறு, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருவரும் ஆபாசப் படத்தை பார்த்த பின்னர் , பாலியல் உறவில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால், தோல்வியில் முடிந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து இந்தவருடம் ஜனவரி மாதத்தில் மீண்டும் அதேபோல், ஆபாசப் படத்தை பார்த்தபிறகு இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின்னர் இருவரும் சாதாரணமாக இருந்த நிலையில், ஏற்கெனவே வயதுக்கு வந்த சிறுமி என்பதால், மாதவிடாய் தள்ளிப் போனதாக தெரியவந்துள்ளது.

2 மாதத்திற்கு மேலாக மாதவிடாய் தள்ளிப் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது தம்பியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதை விடயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியின் 3 மாத கருவை கலைக்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 376(2)(n) (ஒரே பெண்ணைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தல்) மற்றும் போக்சோ பிரிவுகள் 4, 6, 8 மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கு கந்தேஷ்வர் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகள் நல ஆணையம் அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அவரது மூத்த சகோதரர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

8ஆம் வகுப்பு படிக்கும் தங்கையை இருவரும் அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பம் அடைந்தார். இது தொடர்பான புகாரில் 20 மற்றும் 23 வயதுடைய இரு சகோதரர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்