
சந்தேகத்திற்கிடமான பொதியை பெற வந்தவர்கள் கைது
கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய தபால் பரிவர்த்தனையிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு நபர்கள் சொகுசு வாகனத்தில் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு வந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
