இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் செல்வம் அடைக்கலநாதன்

இந்திய நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்தில் மேலும் தெரிவித்ததாவது,

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்