
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இனந்தெரியாத குழு ஒன்றினால் மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது இன்று மாலை 5.30 மணியளவில் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பளை பகுதியில் பயணித்துள்ளனர். இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்ளது.
பொலிஸ் நிலையம் முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வாள்வெட்டு குழுவை துரத்தி சென்ற போதும் ஹயஸ் வானில் குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.
இதன்போது ஹயஸ் வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
