வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம்
-யாழ் நிருபர்-
வடமாகாண பிரதம செயலகம், வட மாகாண வீதி, போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வீதிபாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வடமாகாண வீதி போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீதா சிவதாஸ் தலைமையில் இது நடைபெற்றது.
குறித்த நடை பயணமானது வேம்படிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, அங்கு இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியுடாக சென்று காங்கேசன்துறை வீதியூடாக சென்று, சத்திர சந்திவரை சென்று நிறைவடைந்தது.
பின்னர் வீதிபாதுகாப்பு நடைமுறைப்படி பின்பற்றல் தொடர்பிலும் வாகனசாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்தப்பட்டதுடன், வாகன பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இவ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரணவநாதன், யாழ்ப்பாணம் பொஸில் நிலைய போக்குவரத்து பிரதான பரிதோதகர் பிரியந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட மோட்டார் திணைக்கள அலுவலகர்கள், பணிநிலை உத்தியோகத்தர்கள், பொஸில் மோட்டார் சைக்கிள் உத்தியோகத்தர்கள் சமூகவியாளர்கள், கல்வியாளர்கள், சுகாதாரத்துறையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்