ரிமால் புயல்: சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ரிமால் புயல் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் இன்று ஞாயிற்று கிழமை காலை வேளையில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்