ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கை மீள அழைக்க தீர்மானம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று திங்கட் கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த வழக்கை மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்