இறக்குமதி கட்டுப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானம்

எதிர்வரும் வாரத்தில் இறக்குமதி கட்டுப்பாட்டை மேலும் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

299 பொருட்களுக்கும், வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் 67 வகையான வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.