மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் கோரல்!
2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் 2026 மார்ச் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்ததன் பின்னர் தயாரிக்கப்பட்ட ஆலோசனைப் பத்திரத்தை http://www.pucsl.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிட முடியும்.
அதற்கமைய, உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைக் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது பின்வரும் வழிகளூடாகச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
“2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைக் கோரல்”
தலைவர்,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,
06 ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
28, சாந்த மைக்கல் வீதி,
கொழும்பு 03.
தொலைநகல் (Fax): 011 2392641
வட்ஸ்அப் (WhatsApp): 076 4271030
மின்னஞ்சல்: info@pucsl.gov.lk
இணையத்தளம்: www.pucsl.gov.lk
பேஸ்புக் பக்கம்: www.facebook.com/pucsl
இந்தக் கட்டண திருத்தம் தொடர்பான வாய்மொழிமூலமான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்வுகள் பின்வரும் அட்டவணைப்படி நடைபெறும். பொது ஆலோசனையின் வாய்மொழிமூலமான அமர்வுகளில் கலந்துகொள்வதற்குப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை அழைத்து பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமர்வுகள் நடைபெறும் திகதி மற்றும் இடங்கள்:
07 மார்ச் 2026 – மாவட்ட செயலக கேட்போர்கூடம், அம்பாறை – 077-0399119
11 மார்ச் 2026 – மாவட்ட செயலக கேட்போர்கூடம், வவுனியா – 077-0399119
12 மார்ச் 2026 – பிரதேச செயலக கேட்போர்கூடம், மாத்தளை – 071-4393018
16 மார்ச் 2026 – மாவட்ட செயலக கேட்போர்கூடம், அம்பாந்தோட்டை – 071-4393018
18 மார்ச் 2026 – பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் (BMICH), கொழும்பு 07 – 077-2943193
