காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்