கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு

களுத்துறை பகுதியில் ஏரிக்கு அருகில் உள்ள மரத்தடியில் புதைக்கப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரின் கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்