நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து போதைப் பொருள் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து கஞ்சா பொதிகள் கைபற்றப்பட்டுள்ளன.

பிரதேச மக்களால் தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்தலத்திற்கு சென்றபோது கஞ்சா பொதிகளுடன் நிறுவனத்தில் பணியாற்றிய இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறிய முச்சக்கர வண்டி ஒன்றை அபகரித்து கொண்டு வந்த போது அந்த வாகனத்தில் குறித்த பொதிகள் இருந்ததாகவும், தமக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது இருவரையும் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்