சர்வதேச விசாரணைக்கு தயார்!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் பரபரப்பு தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானா அறிவித்துள்ளார்

ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானாஇ சுயாதீன விசாரணை ஒன்றில் தாம் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

பிரித்தானிய சனல் 4 தொலைகாட்சி மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட ‘இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்’ என்ற ஆவணப்படம் இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது எனினும் நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் எமது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன

நான் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய போதும்இ நான் ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல

இதன் காரணமாகவே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்கள் எனக்கு கிடைத்தன’ என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச விசாரணைக்கு தான் தயார் என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தி; பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

இதன்போது கருத்துரைத்த அவர்,

2019ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்இ இதுவரை அதனுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாதுள்ளமை கவலையளிக்கிறது

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும்இ அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிலர் தடையாக இருந்துள்ளனர்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி பொதுமக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பில் இந்த தாக்குதல் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா வலியுறுத்தினார்.

இதனிடையே குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், தாம் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்