இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களே

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்காரர்களே :

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்களே :

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

கடக ராசிக்காரர்களே :

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். ஆனால், பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களே :

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசிக்காரர்களே :

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.

துலா ராசிக்காரர்களே :

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

விருச்சிக ராசிக்காரர்களே :

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களே :

சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கல்லூரிக் கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மகர ராசிக்காரர்களே :

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.

கும்ப ராசிக்காரர்களே :

கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னை கள் ஏற்படக்கூடும். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீன ராசிக்காரர்களே :

எடுத்த காரியம் அனுகூலமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள் ளது. உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்